என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாப்பூர் அருகே மனகுப்பை லாரியில் சிக்கி டிரைவர் பலி
    X

    மயிலாப்பூர் அருகே மனகுப்பை லாரியில் சிக்கி டிரைவர் பலி

    மயிலாப்பூர் அருகே மனகுப்பை லாரியில் சிக்கி டிரைவர் நசுங்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஆடிபட்டிபூஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அள்ள குத்தகை எடுத்தவரின் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு குப்பைகளை கொட்டுவதற்காக மயிலாப்பூர் அம்பேத்கார் பாலம் குப்பை கிடங்குக்கு லாரியை ஓட்டி சென்றார். குப்பைகளை கொட்ட லாரியின் பின்பகுதியை மேல்நோக்கி தூக்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் முத்துவேல் லாரியின் பின் பகுதியில் மேல்நோக்கி இருந்த நிலையில் அதன் இடைப்பட்ட பகுதியில் படுத்து தூங்கினார்.

    அப்போது திடீரென்று லாரியின் பின்பகுதி கீழே இறங்கியது. இதில் முத்துவேல் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சத்தம் கேட்டு வந்த மற்ற டிரைவர்கள் முத்துவேல் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் முத்துவேல் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    பலியான முத்துவேலுக்கு காந்தா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
    Next Story
    ×