என் மலர்

  செய்திகள்

  வேளச்சேரியில் என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் - ஒரு கிலோ வெள்ளி கொள்ளை: போலீசார் விசாரணை
  X

  வேளச்சேரியில் என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் - ஒரு கிலோ வெள்ளி கொள்ளை: போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேளச்சேரியில் என்ஜினீயர் வீட்டில் 5 பவுன் - ஒரு கிலோ வெள்ளி கொள்ளை போன சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
  வேளச்சேரி:

  வேளச்சேரி சேஷாத்திரிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன். சாப்ட்வேர் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

  இவரது மனைவி காவியா. அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

  நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் காவியா வீட்டுக்கு வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சீன நாட்டு பணம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், லேப்-டாப்பை காணவில்லை.

  மர்ம கும்பல் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

  இதுகுறித்து வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டின் எதிரே உள்ள தனியார் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

  அதில் 3 வாலிபர்கள் காலை 11.05 மணிக்கு தீனதயாளன் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் 11.50 மணிக்கு ஒருவன் வீட்டில் இருந்து வெளியே வந்து நோட்டமிடுகிறான். 12.50 மணிக்கு 3 பேரும் கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பிச் செல்கிறார்கள்.

  இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×