என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் வெடிகுண்டு பீதி
    X

    சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் வெடிகுண்டு பீதி

    சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பயணிகள் வெடி குண்டு இருக்கலாம் என்று பீதி அடைந்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை முனையம் எதிரே போலீஸ் பூத் உள்ளது. இதன் அருகே இன்று காலை ஒரு பை கிடந்தது. நீண்ட நேரம் ஆகியும் அதை யாரும் எடுத்து செல்லவில்லை.

    இதை பார்த்த பயணிகள் அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று பீதி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் வெடி குண்டு நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் அந்த மர்ம பையை திறந்து சோதனையிட்டனர். அதில் பழைய துணிகள் இருந்தன.

    இதனால் பயணிகள் மற்றும் போலீசார் நிம்மதி அடைந்தனர். பயணிகள் யாராவது பையை தவறவிட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×