என் மலர்

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் உள்ள 12 கிளைச் சிறைகளை இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளிகளாக மாற்றிய அரசாணை ரத்து
    X

    தமிழகம் முழுவதும் உள்ள 12 கிளைச் சிறைகளை இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளிகளாக மாற்றிய அரசாணை ரத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகம் முழுவதும் உள்ள 12 கிளைச் சிறைகளை, இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளிகளாக மாற்றம் செய்து கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து 5 நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான கவுதமன், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், 1999-ம் ஆண்டு ஒரு வழக்கில் எனக்கு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், அப்போது எனக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. வளரிளம் பருவத்தில் உள்ளவர்களை, இளம் குற்றவாளிகள் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது. மேலும், என்னை கோவை மத்திய சிறையிலும் அடைக்க முடியாது. இளம் குற்றவாளிகள் சீர்திருத்தச் சட்டத்தின்படி, என்னை இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளியில்தான் அடைத்து இருக்க வேண்டும். எனவே, எனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘குற்ற வழக்கில் தண்டனை பெற்ற வளரிளம் பருவத்தை சேர்ந்த ஒருவர், இளங்குற்றவாளி சீர்த்திருத்த சட்டத்தின் கீழ் பயனடைய முடியுமா? சலுகைகளை அனுபவிக்க இயலுமா? 21 வயதைத் தாண்டிய பிறகு முன்தேதியிட்டு, இந்த சட்டத்தின் சலுகைகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கேட்க முடியுமா? உட்பட பல்வேறு சட்ட கேள்விகள் எழுகின்றன? ஏற்கனவே, இதில் சில அம்சங்களை 3 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால், 5 நீதிபதிகளை கொண்ட முழு டிவிசன் பெஞ்ச் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஏ.செல்வம், எம்.சத்தியநாராயணன், பி.ராஜேந்திரன், ஆர்.மாலா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை கொண்ட முழு அமர்வை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இந்த 5 நீதிபதிகளும் வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

    இளங்குற்றவாளி சீர்திருத்தப்பள்ளி தமிழகத்தில் புதுக்கோட்டையில் மட்டும் தான் உள்ளது. ஆனால் ஒரு வழக்கில் இந்த ஐகோர்ட்டு, விசாரணை கைதியாக இருந்தாலும், தண்டனை கைதியாக இருந்தாலும் அவர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் என்றால் அவர்களை சீர்திருத்தப் பள்ளியில் தான் அடைக்க வேண்டும என்று உத்தரவிட்டுள்ளது.

    இதன் காரணமாக, தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 12 கிளைச் சிறைகளை, இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளிகளாக மாற்றம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப்பள்ளிகளில், சட்டப்படியான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். அந்த அடிப்படை வசதிகள் தமிழகத்தில் சீர்திருத்தபள்ளிகளாக மாற்றப்பட்ட கிளை சிறைகளில் இல்லை. எனவே தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.

    எனவே, 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகளை, பொதுவான சிறைகளில் அடைக்கத்தான் இனி மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவிட வேண்டும். இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிட கூடாது.

    மேலும், இளங்குற்றவாளிகள் சீர்திருத்தச் சட்டம் என்பது 1928-ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் காலாவதியாகி விட்டதால், அதை ரத்து செய்யவேண்டும். புதிய சட்டத்திருத்தங்களை இந்த சட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

    இளங்குற்றவாளிகள் சீர்திருத்த சட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியாது. அதேபோல, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு, இந்த சட்டத்தின் சலுகைகளை வழங்க முடியுமா? என நாங்கள் ஆராய முடியாது.

    இந்த சலுகைகளை சம்பந்தப்பட்டவர்கள்தான் கேட்டு பெறவேண்டும். அதேபோல, 21 வயதைக் கடந்தவர்கள், இந்த சட்டத்தின் பலன்களை முன் தேதியிட்டு வழங்கவேண்டும் என்று கேட்க முடியாது.

    இவ்வாறு அந்த உத்தரவில் 5 நீதிபதிகளும் கூறியுள்ளனர்.
    Next Story
    ×