என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே மாணவிக்கு கட்டாய தாலி கட்ட முயற்சி: வாலிபர் கைது
    X

    சீர்காழி அருகே மாணவிக்கு கட்டாய தாலி கட்ட முயற்சி: வாலிபர் கைது

    சீர்காழி குடவாசல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வாலிபர் பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    சீர்காழி:

    சீர்காழி கடவாசல் குளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரை திருக்கருக்காவூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திக் (23) என்பவர் கடந்த 1 வருடமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான கார்த்திக் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பு படித்து முடித்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தன்னை ஒருவர் தொந்தரவு செய்வது குறித்து தெரிவித்தார். உடனே பெற்றோர்கள் நீ இனிமேல் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் அந்த மாணவி வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மாணவி வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கார்த்திக் அந்த மாணவியை பிடித்து கட்டாய தாலி கட்ட முயன்றுள்ளார். உடனே மாணவி அதை தட்டி விட்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

    பின்னர் அந்த மாணவியின் பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அழகு துரை வழக்குப்பதிவு செய்து பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் கார்திக்கை கைது செய்தார். மாணவிக்கு வாலிபர் கட்டாயமாக தாலி கட்ட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×