என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் திருடிய அண்ணன்-தம்பி கைது
    X

    பெருந்துறை பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் திருடிய அண்ணன்-தம்பி கைது

    பெருந்துறை பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் நேற்று பெருந்துறை புது பஸ் நிலையத்தில் ஈரோடு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது இவரது அருகில் வந்த 2 பேர் சுரேசின் சட்டைப்பையில் இருந்த ரூ.875-ஐ நைசாக திருடினர்.

    இதை கவனித்து விட்ட சுரேஷ் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். பிறகு சுரேஷ் மற்றும் அங்கு நின்றவர்கள் பணத்தை திருடி கொண்டு ஓடிய 2 பேரை விரட்டிபிடித்தனர்.

    இதன்பிறகு அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த ஆசிப் ராஜா (25), அஜ்மல் கான் (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பிகள்.

    இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×