என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மாப்பேட்டை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
    X

    அம்மாப்பேட்டை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

    அம்மாப்பேட்டை அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அம்மாப்பேட்டை:

    அம்மாப்பேட்டை அருகே உள்ள ஊமா ரெட்டியூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் நவின்குமார் (வயது 24).

    தந்தை சின்ராஜ் இறந்து விட்டதால் நவின் குமார் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். நவின்குமார் அங்குள்ள மார்க்கெட்டில் கீரை வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு இவர் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டாராம். இது தொடர்பாக அவரது தாயாரிடம் அவர் தகராறு செய்தார்.

    அப்போது திடீர் என்று நவின் குமார் ஓடிசென்று தனது வீட்டின் அருகே 50 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து விட்டார்.

    இதில் பலத்த அடிபட்ட அவர் பரிதாபமாக இறதார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு அதிகாரி ராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்து நவின் குமாரின் உடலை மீட்டனர்.

    இதன்பிறகுஅவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அம்மாப் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×