என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே கணவன் மர்ம சாவு: மனைவி கைது
சீர்காழி அருகே கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த கீழமாத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி மாலதி(25). இவர்களுக்கு திருமணமாகி 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகம் தனது மனைவியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் ஆறுமுகம் வீட்டை விட்டு வெளியேறி கீழமாத்தூருக்கு சென்றார். பின்னர் கடந்த 23-ந்தேதி தனது மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் அவருக்கும் மாலதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை ஆறுமுகம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பரிசோதனையில் ஆறுமுகத்தின் கழுத்தில் தூக்கு மாட்டியதற்க்கான தடம் இருந்துள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் ஆறுமுகத்தை தற்கொலைக்கு தூண்டியதாக மாலதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story