என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே மின்னல் தாக்கி 3 பேர் படுகாயம்
    X

    மயிலாடுதுறை அருகே மின்னல் தாக்கி 3 பேர் படுகாயம்

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மின்னல் தாக்கியதில், கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் காயமடைந்த 3 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை வட்டம், நெடுமருதூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 35) எல்க்ட்ரீசியன். நேற்று மயிலாடுதுறை பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது பாரதிதாசன் வீட்டில் மனைவி லதா, தம்பி சுவாமிநாதன் மற்றும் 2 குழந்தைகள் ஆகியோருடன் இருந்துள்ளார்.

    அப்போது திடீரென மின்னல் இடி தாக்கியதால் பாரதிதாசனின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பாரதிதாசன், மற்றும் இவரது தம்பி சுவாமிநாதன்(30), மாமனார் ராமசாமி(60) ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் குறித்து, அறிந்த ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, தாசில்தார் காந்திமதி ஆகியோர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    இது குறித்து சிகிச்சைப் பெற்று வரும் பாரதிதாசன் கூறுகையில்:-

    மின்னல் தாக்கியதில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், 5 பவுன் நகைகள், தம்பியின் திருமண செலவிற்காக வைத்திருந்த ரூ 30 ஆயிரம் பணம் ஆகியவை தீயில் கருகிவிட்டது என்று கூறினர்.

    Next Story
    ×