என் மலர்
செய்திகள்

மாநில அளவிலான கராத்தே போட்டி: 500 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
மாநில அளவிலான கராத்தே போட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே உள்ள அரசு பள்ளியில் இன்று நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த இந்த போட்டியில் ஒற்றை கட்டா, குரூப்கட்டா மற்றும் குமித்தே போன்ற போட்டிகள் நடந்தன.
இந்த போட்டியை தென்னரசு எம்.எல்.ஏ தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கராத்தே மாஸ்டர் திருமலை வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் முருகுசேகர், ஈரோடு நகர எம்.ஜி ஆர் மன்ற செயலாளர் குப்புசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






