என் மலர்
செய்திகள்

கர்நாடக லாரி பர்கூர் மலையில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயத்துடன் தப்பினர்
அந்தியூர் சந்தைக்கு வந்த கர்நாடக லாரி பர்கூர் மலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
அந்தியூர்:
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியிலிருந்து ஒரு லாரி வெங்காய மூட்டைகளை ஏற்றி கொண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று நடக்கும் சந்தைக்கு இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
லாரியை முகமது முஜின் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் 5 பேர் லாரி மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். பர்கூர் மலையில் நள்ளிரவு 12 மணிக்கு வந்து கொண்டிருந்தது. பர்கூர் வனப்பகுதி மயான வளைவில் லாரி திரும்பும் போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுபாட்டில் இருந்து விலகி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது.
நல்ல வேளையாக மலையின் பள்ளத்தில் கவிழவில்லை. அப்படி கவிழ்ந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். ரோட்டிலேயே கவிழ்ந்ததால் வெங்காய மூட்டைகள் சிதறி ரோட்டில் கிடந்தது. டிரைவருக்கு காலில் அடியுடன் தப்பினார். மேலும் லாரியின் மேல் இருந்த 5 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

Next Story