என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாந்தோம் அருகே மீனவருக்கு அரிவாள் வெட்டு
    X

    சாந்தோம் அருகே மீனவருக்கு அரிவாள் வெட்டு

    சாந்தோம் அருகே மீனவரை அரிவாளால் வெட்டிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சாந்தோம் அருகே நொச்சி குப்பம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், மீனவர். நேற்று இரவு நொச்சிக் குப்பம் மீன் மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை கீழே தள்ளிவிட்டு அரிவாளால் சரமாரியாக தலை, கழுத்து, மார்பில் வெட்டியது. பின்னர் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜ்குமாரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சுயநினைவு இல்லாமல் உள்ளார்.

    இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×