என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
காரைக்குடி எல்.ஐ.சி. அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி டி.டி.நகர் அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தேவகோட்டையில் உள்ள எல்.ஐ.சி. கிளையில் அதிகாரியாக உள்ளார். இவருக்கு காந்திமதி (48) என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று காளிமுத்து உள்பட 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






