என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் வட்டார விளையாட்டு போட்டி: கடும் வெயிலால் மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
    X

    மானாமதுரையில் வட்டார விளையாட்டு போட்டி: கடும் வெயிலால் மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

    மானாமதுரையில் நடந்த வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள் கடும் வெயிலால் மயக்கம் அடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    மானாமதுரை:

    தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மானாமதுரை தாலுகாவுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ– மாணவிகளுக்குகான தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த 2 நாட்களாக மானாமதுரையில் நடைபெற்று வருகிறது.

    இந்த விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் சிலர் காலில் செருப்பு அணியாமலும், போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலும் விளையாடி வருகின்றனர். நேற்று 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மதியம் கடும் வெயிலில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியும், நீளம் தாண்டுதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவிகள் சிலர் கடும் வெயிலில் மயங்கி விழுந்து தரையில் சுருண்டு விழுந்தனர்.

    உடனடியாக அதிகாரிகள் அந்த மாணவிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×