என் மலர்

  செய்திகள்

  கோட்டாரில் வீட்டு பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை
  X

  கோட்டாரில் வீட்டு பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோட்டாரில் வீட்டு பூட்டை உடைத்து கட்டிட வேலைக்காக வைக்கப்பட்டிருந்த 17 பாக்ஸ் ஒயர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  நாகர்கோவில்:

  கோட்டார் வெள்ளாடிச்சிவிளை ஆசாத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சேக் முகம்மது (வயது 42). இவர் காண்டிராக்டர் தொழில் செய்துவருகிறார்.

  சம்பவத்தன்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

  வீட்டில் கட்டிட வேலைக்காக வைக்கப்பட்டிருந்த 17  பாக்ஸ் ஒயர்கள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசில் சேக்முகம்மது புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் சோதனை செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று மீண்டும் வீட்டிற்கே வந்தது.  அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

  மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  
  Next Story
  ×