என் மலர்

  செய்திகள்

  வேலாயுதம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம்
  X

  வேலாயுதம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலாயுதம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

  வேலாயுதம்பாளையம்:

  கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி அரசு காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 30). நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பாலபட்டியை சேர்ந்தவர் மோகன் (35). இவரும் புகளுர் காகித ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

  இந்நிலையில் வேலை முடிந்து புன்னம் சத்திரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மோகன் மோட்டார் பைக்கை ஓட்டினார். சம்பத் பின்னால் அமர்ந்திருந்தார். இந்நிலையில் புஞ்சை புகளுர் பாரதி நகரைச் சேர்ந்த சரவண கோபாலகிருஷ்ணன்(37) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் , மோகன் ஓட்டி சென்ற மோட்டார் பைக் மீது மோதியது. இதில் சம்பத் மற்றும் மோகன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

  அதேபோல் கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி அருகே செங்காட்ட னூரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த பாலசுப்பிர மணியன்(51) என்பவர் காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய கார் ஆசை தம்பி மீது மோதியது. இதில் ஆசைதம்பி பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவங்கள் குறித்து வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×