என் மலர்

    செய்திகள்

    சரவணம்பட்டியில் லிப்ட்டில் அடிபட்டு வடமாநில வாலிபர் பலி
    X

    சரவணம்பட்டியில் லிப்ட்டில் அடிபட்டு வடமாநில வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சரவணம்பட்டியில் லிப்ட்டில் அடிபட்டு வடமாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுமந்த் பண்டா(வயது 19). இவர் கடந்த சில மாதங்களாக கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுமந்த் பண்டா லிப்டில் பொருட்களை ஏற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட்டை ஆன் செய்யவே லிப்ட் அவரது தலையில் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக நிறுவன சூப்பர்வைசரான பீளமேட்டை சேர்ந்த ராஜ்குமார்(46) என்பவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×