என் மலர்

  செய்திகள்

  கொடைக்கானலில் ஆதிவாசி பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சி: 3 வாலிபர்கள் கைது
  X

  கொடைக்கானலில் ஆதிவாசி பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சி: 3 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் ஆதிவாசி பெண்களை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

  கொடைக்கானல்:

  கொடைக்கானல் கீழ் மலை பாய்ச்சலூர் கரடிப்பாறை பகுதியில் ஆதிவாசி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சம்பவத்தன்று மாலை அந்த சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாய்ச்சலூருக்கு சென்று விட்டு காட்டு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள் அவர்களின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்கள் சத்தம் போடவே அவ்வழியே வந்தவர்கள் அப்பெண்களை காப்பாற்றினர். தப்பி ஓடியவர்களை விரட்டினர். இதில் 3 பேர் சிக்கினர். ஒருவர் தப்பித்து விட்டார்.

  பிடிபட்டவர்களை தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 20), மணிகண்டன் (19), விஜய் (17) என்று தெரியவந்தது. பின்னர் அவர்கள் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  டி.எஸ்.பி. சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெயராணி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தலைமறைவான சந்தோஷ் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×