என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறையில் தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை
    X

    பெருந்துறையில் தூக்குபோட்டு மெக்கானிக் தற்கொலை

    பெருந்துறை அருகே தூக்கு போட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம், நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். அப்பாச்சி இவரது மகன் சங்கர்(29). இவர் பெருந்துறை- ஈரோடு ரோட்டில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார்.

    இவருக்கு திருமணமாகி ரம்யா(27) என்ற மனைவியும் ராகுல்(4) என்ற மகனும் உள்ளனர். . தற்பொழுது இவர் ஈரோடு, வில்லரசம் பட்டி பகுதியில் வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து ஒர்க்ஷாப்புக்கு சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் சங்கர் வீடு திரும்பவில்லை.இதனால் அவரது மனைவி ரம்யா அவரை தேடினார்.

    இந்த நிலையில் ஒர்க்ஷாப் பின் உள்புறமுள்ள ரூமின் மேற்கூரையில் இருந்த பேனில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பெருந்துறை போலீசார் சென்று விசாரித்தனர்.

    இதன்பிறகு சங்கரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×