என் மலர்

  செய்திகள்

  மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி
  X

  மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிர் இழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மதுரை:

  மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது39). இவர் நேற்றிரவு அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் தவறி விழுந்த விஜயகுமார் படுகாயம் அடைந்தார். ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

  இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×