என் மலர்

    செய்திகள்

    தர்மபுரி அருகே 2 கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்
    X

    தர்மபுரி அருகே 2 கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தர்மபுரி அருகே 2 கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பம்பாடியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் ஜீவிதா (22). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று ஏ.பள்ளிப்பட்டி கோவில் தேர் திருவிழாவிற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து ஜீவிதா தந்தை சுந்தரம் ஏ.பள்ளிப் பட்டி போலீஸ் நிலையத்தில் அரூரைச் சேர்ந்த சரவணன் மகன் வேலு என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவிதாவும், வேலுவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலுவும், ஜீவிதாவும் ஒரே கல்லூரியில் டிப்ளேமோ படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அம்பாளப் பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபிகா (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அவரை எங்கும் தேடியும் கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆறுமுகம் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் அம்பாளப்பட்டியைச் சேர்ந்த விமல் என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தீபிகாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கண்ணுக் காரன்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரியங்கா(19). இவர் தர்மபுரி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பிரியங்கா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை.

    இதுகுறித்து ரமேஷ் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் அதே ஊரைச் சேர்ந்த சித்தன் மகன் சீராளன் நாமக்கல்லில் மேஸ்திரி வேலை பார்த்து வருபவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி பிரியங்காவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×