என் மலர்

  செய்திகள்

  கமுதி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி- பரபரப்பு
  X

  கமுதி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி- பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமுதி அருகே இருதரப்பினர் மோதலால் கோவில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து கமுதி தாலுகா அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
  கமுதி:

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலத்தில் பூங்குழலி அம்மன் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. விழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரி டையே முன்விரோதம் இருந்து வருகிறது.

  இதைத்தொடர்ந்து மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், கும்பாபிஷேக விழாவை நடத்த தடை விதித்தனர். இதனால் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

  இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண்கள் உள்பட 5 பேர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

  பொதுமக்களின் இந்த போராட்டம் பகல் 12 முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பின்னர் தாசில்தார் செந்தில்குமார், டி.எஸ்.பி. கணபதி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
  Next Story
  ×