என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே பிளஸ்-2 மாணவரை தாக்கிய 3 பேர் கைது
வேதாரண்யம் அருகே பிளஸ்-2 மாணவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் சுபாஷ் (வயது 16). இவர் வேதாரண்யம் சி.க.சு.அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பள்ளியை விட்டு சொந்த ஊருக்கு மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். மினி பஸ் பெரியகுத்தகை காளியம்மன் கோவில் நிறுத்தத்தில் நின்ற போது புஷ்பவனத்தைச் சேர்ந்த 3 பேர் பஸ்சில் இருந்த சுபாசை கீழே இறங்க சொல்லி தரக்குறைவாக பேசி கையால் அடித்து தாக்கி உள்ளனர்.
இதுபற்றி சுபாஷ் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நாகை கோர்டில் ஆஜர் செய்து கோர்ட் உத்தரவுபடி அவர்களை தஞ்சை இளைஞர் கூர்நோக்கு பள்ளியில் சேர்த்தனர்.
Next Story






