என் மலர்

  செய்திகள்

  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
  X

  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே சாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிநாயக்கர் (80). இவர் நேற்று தனது வீட்டு முன்பு படுத்து தூங்கினார். சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க தோட்டத்திற்கு சென்றார்.

  அப்போது அருகே இருந்து விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதில் அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பு படுத்திருந்த பழனிநாயக்கரை காணவில்லை என்று உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்து எங்கும் அவர் கிடைக்கவில்லை.

  அப்போது வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் அவர் பிணமாக கிடப்பதை தகவல் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்கள் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிநாயக்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×