என் மலர்

  செய்திகள்

  வேலூர்-பாகாயத்தில் நாளை மின்நிறுத்தம்
  X

  வேலூர்-பாகாயத்தில் நாளை மின்நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் மற்றும் பாகாயத்தில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  வேலூர்:

  வேலூர், தொரப்பாடி மற்றும் சாத்துமதுரை துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பேஸ்-1 முதல் பேஸ் 5 வரை மற்றும் சத்துவாச்சாரி விஜயராகவபுரம், சி.எம்.சி. காலனி, கலெக்டர் அலுவலகம், தென்றல் நகர், ராகவேந்திரா நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், சைதாப்பேட்டை, மூலைகொல்லை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

  அதேபோன்று தொரப்பாடி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பாகாயம், சித்தேரி, இடையன்சாத்து, விருப்பாட்சிபுரம், பலவன்சாத்து, சாமிநகர், சாய்நாதபுரம், எழில்நகர், சாஸ்திரி நகர், காந்திநகர், அரியூர் பகுதிகளிலும், சாத்துமதுரை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சாத்துமதுரை, நெல்வாய், குளவிமேடு, துத்திப்பட்டு, பென்னாத்தூர், காட்டுபுதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை மின்சாரவாரிய செயற்பெறியாளர் ரா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×