என் மலர்

  செய்திகள்

  வாணியம்பாடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
  X

  வாணியம்பாடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாணியம்பாடி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை சமுத்துவ புரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவருடைய மகள் துர்கா (வயது 17). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

  துர்கா நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். மாலை 5 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது, அவருடைய முகம் வாடிய நிலையில் இருந்தது. பெற்றோர் கேட்டபோது, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

  பெற்றோரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

  இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, மாணவியின் உடலை மீட்டனர். அப்போது அவருடைய உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிக்கு ஏதோ நிகழ்ந்துள்ளது. இதனால் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×