என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பலி
  X

  ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு ஊழியராக இருப்பவர் செந்தில்முத்து. இவரது மனைவி முத்துமாரி (வயது34). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் செந்தில்முத்து, தனது மோட்டார் சைக்களில் ராஜபாளையத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு அழைத்து சென்றார்.

  பின்னர் 2பேரும் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் ஊர் திரும்பினர். ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துமாரி சம்பவ இடத்திலேயே இறந்தார். செந்தில் முத்து காயமடைந்தார்.

  இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தேனி மாவட்டம், உத்தம பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரை கைது செய்தனர்.

  Next Story
  ×