என் மலர்

    செய்திகள்

    பென்னாகரம், நல்லம்பள்ளி பகுதிகளில் சபாநாயகரின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
    X

    பென்னாகரம், நல்லம்பள்ளி பகுதிகளில் சபாநாயகரின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவாரம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து பென்னாகரத்தில் தி.மு.க.வினர் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பென்னாகரம்:

    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவாரம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தி.மு.க.வினர் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம், பென்னாகரம் நகர செயலாளர் வீரமணி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நல்லம்பள்ளியில் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் வீரமணி, ஒன்றிய நிர்வாகிகள் ரெங்கநாதன், சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோல் தர்மபுரி நகரின் சில பகுதிகளிலும் தி.மு.க.வினர், சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்தனர்.
    Next Story
    ×