என் மலர்

  செய்திகள்

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  X

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான குடிமைப்பணி தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை -4, இராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

  2016-2017 ஆம் ஆண்டிற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 08.08.2016 லிருந்து 24.08.2016 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த இறுதி நாளுக்குள் மதுரை அல்லது சென்னை ஆகிய மையங்களுக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு சென்னை இராணி மேரி கல்லூரி (044 – 2844 4995) மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி (0452 – 2534 988) முதல்வர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×