என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கர்நாடக கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
    X

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கர்நாடக கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கர்நாடக கள்ளக்காதல் ஜோடி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ளது கும்பரகுண்டி. கர்நாடக- தமிழக மாநில எல்லையில் இந்த வனப்பகுதி ஊர் உள்ளது.

    இந்த வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஒரு ஜோடி ஒன்றாக ஒரே கயிற்றில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதுபற்றி தாளவாடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஒரே கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டஜோடியை மீட்டனர். பிறகு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையொட்டி போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி என தெரிய வந்தது.

    கர்நாடக மாநில அம்சவாடியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 28). திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்தவர் சுருதி என்கிற மகாலட்சுமி இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இதுபற்றிய வி‌ஷயம் வெளியே வந்தது கள்ளக்காதல் ஜோடிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு வந்து அங்கு ஒரே கயிற்றில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×