என் மலர்

  செய்திகள்

  முந்தி செல்வதில் மோதல்: மாநகர பஸ்சை உடைத்து டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
  X

  முந்தி செல்வதில் மோதல்: மாநகர பஸ்சை உடைத்து டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாலையில் முந்தி செல்வது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மாநகர பஸ் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  ராயபுரம்:

  உயர்நீதிமன்றத்தில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் (56-சி) சென்று கொண்டிருந்தது. டிரைவராக சசிகுமார் இருந்தார். பஸ் சென்று கொண்டிருந்த போது முந்தி செல்வதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களுக்கும் டிரைவருக்கும் போட்டி ஏற்பட்டது.

  தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் அருகே சென்றபோது பஸ்சை வழிமறித்து 2 வாலிபர்களும் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் டிரைவர் சசிகுமாரை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணபிரபு வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

  அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த நவீன்சிங், பிரகாஷ் என்பது தெரிந்தது. நவீன்சிங் பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×