என் மலர்

  செய்திகள்

  செங்கல்பட்டு அருகே கோவில் விழாவில் நடனமாடிய வாலிபர் அடித்துக்கொலை
  X

  செங்கல்பட்டு அருகே கோவில் விழாவில் நடனமாடிய வாலிபர் அடித்துக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கல்பட்டு அருகே கோவில் விழாவில் நடனமாடிய வாலிபர் அடித்துக்கொலை செய்தனர்.
  செங்கல்பட்டு:

  செங்கல்பட்டு அடுத்த பாலூர் அருகே மேலச்சேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த 16-ந்தேதி கூழ் வார்க்கும் விழா நடந்தது. அன்று இரவு இசை கச்சேரி நடந்தபோது காவாங்கரை எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த கலையரசன் (20) நடனமாடினார்.

  அப்போது அவரை சிலர் சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

  இதையடுத்து மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று பாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கொடுத்த மனுவில், கோவில் விழாவில் கலையரசனை அவரது தாய்மாமன்கள் ரங்கதுரை, ஏழுமலையை தாக்கினார்கள். எனவே இதை கொலை வழக்காக மாற்றி நடவடிக்கை வேண்டும் என்ற கூறி உள்ளனர்.
  Next Story
  ×