என் மலர்
செய்திகள்

தலைமை குற்றவியல் வக்கீலாக ஆர்.ராஜரத்தினம் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
தலைமை குற்றவியல் வக்கீலாக ஆர்.ராஜரத்தினம் (வயது 56) என்பவரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
தமிழக தலைமை குற்றவியல் வக்கீலாக இருந்தவர் எஸ்.சண்முகவேலாயுதம். இவர், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு வக்கீல் ஆர்.ராஜரத்தினம் (வயது 56) என்பவரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக தலைமை குற்றவியல் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் ஆர்.ராஜரத்தினம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர். இவரது தந்தை, ராஜகோபாலன், மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது தாய் வழித் தாத்தா அய்யாசாமி செட்டியார், ஆங்கிலேயர் காலத்தில் தலைமை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர்.
வக்கீல் ராஜரத்தினம், சட்டப்படிப்பை முடித்து விட்டு 1985-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். பின்னர், மூத்த வக்கீல் பி.குமாரின் ஜூனியராக பணியாற்றி வந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அவர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமாருக்கு உறுதுணையாக ஆர்.ராஜரத்தினம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story