என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூரில் பா.ஜ.க. சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
  X

  பெரம்பலூரில் பா.ஜ.க. சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது.
  பிரதமர் நரேந்திர மோடியின் உத்திரவின் படி பா.ஜ.க.வினர் மாவட்டம் தோறும் சுதந்திர தினத்தையொட்டி தேசபற்றை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி உள்ளனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பா.ஜக. சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஊர்வலம் வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், காமராஜர் சிக்னல், எளம்பலூர் சாலை, ரோவர் சாலை வழியாக சென்று புறநகர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

  இந்த நிகழ்ச்சியை பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணா சிவசுப்ரமணியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் சாமி இளங்கோவன், நகர தலைவர் கமல் முத்துகுமார், மாவட்ட நிர்வாகிகள் குரு ராஜேஷ, இளங்கோவன், தனபால், ஒன்றிய தலைவர் கலைச்செல்வன், கைகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பெரம்பலூர் ஒன்றிய பா.ஜக. சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எசனை மற்றும் அம்மாபாளையம் பகுதிகளில் பாரதமாதா உருவ படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
  Next Story
  ×