என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே தீ விபத்து: வீடு-3 கடைகள் சேதம்
வேதாரண்யம் அருகே தீ விபத்தில் கூரை வீடும் 3 கடைகளும் எரிந்து சேதம் அடைந்தன. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சரகம், அவரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா அன்பழகன். இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டை ஒட்டி மகேந்திரன் இறால் தீவன கடையும், சுதர்சன் முடிதிருத்தும் கடையும், ராஜேந்திரன் டீ கடையும் வைத்து நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மின் கம்பிகள் உரசி தீப்பொறி சுலோச்சனா அன்பழகன் வீட்டின் மீது விழுந்ததால் கூரை வீடும், 3 கடைகளும் எரிந்து சேதமானது. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவலறிந்து வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்திற்கு தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழ்வாணன், அவரிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கன்சுராஜா, தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் சரக துணை கண்காணிப்பாளர் பொன் கார்த்திக்குமார் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.
வீடு இழந்த சுலோச்சனா அன்பழகனுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை தாசில்தார் இளங்கோவன் வழங்கினார்.

Next Story