என் மலர்
செய்திகள்

மதுரை செல்லூரில் ஆட்டோ டிரைவரின் மனைவி தற்கொலை
குடும்ப பிரச்சினையில் ஆட்டோ டிரைவரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுமதி (27). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ பழுதாகி உள்ளதாகவும், அதனை சரி செய்வதற்கு நகையை தருமாறு ஜெயராமன் மனைவியிடம் கேட்டுள்ளார். அவரும் நகையை கொடுக்க அதனை வாங்கி அடகு வைத்துள்ளார். அந்த பணத்தை ஜெயராமன் தனக்கு செலவழித்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் வெறுப் படைந்த சுமதி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த சுமதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுமதி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story