என் மலர்
செய்திகள்

மதுரையில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வக்கீல் கைது
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருபவர் மாளவியா (வயது31). இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கிராமம் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கில் மாளவியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மதுரை பனகல் ரோட்டில் அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சத்தியபாமா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்து வக்கில் மாளவியா தாக்கியதாக மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாளவியாவை கைது செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சத்யபாமா வழக்குகளுக்காக மதுரை ஐகோர்ட்டு வந்து செல்லும்போது மாளவியாவுடன் பேசி வந்துள்ளார். விஷ்ணு பிரியா வழக்கில் போலீசார் மாளவியாவை விசாரணை நடத்திய பிறகு சத்யபாமா பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஏன்? தன்னிடம் பேசவில்லை என்று கூறி மாளவியா சப்-இன்ஸ் பெக்டர் சத்யபாமாவை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.