என் மலர்
செய்திகள்

சென்னையில் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை:
விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறி விட்டார். இந்திய நாட்டின் வளங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
அன்னிய முதலீட்டால் நமது நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டில் நதிநீர் உரிமையை பாதுகாத்திட வேண்டும். வெள்ளம்பாதித்த பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க வேண்டும். கோவில் மனை குடியிருப்பு பகுதிகளில் வாடகை நிர்ணயத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏழுமலை, தனபால், சீனிவாசன் சேக்கிழார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.