என் மலர்

  செய்திகள்

  கரூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
  X

  கரூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி விடுதி அறைக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  கரூர்:

  கரூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி விடுதி அறைக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் பிரீத்தி ரோஜா (வயது 18). இவர் கரூர் புலியூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

  நேற்று வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென பிரீத்தி ரோஜா எழுந்து, விடுதி அறைக்கு சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், விடுதி அறைக்கு சென்று பார்த்த போது, பிரீத்தி ரோஜா தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

  இது குறித்து உடனடியாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் பிரீத்தி ரோஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அறையில் இருந்தது. அதில், தனக்கு உடல்நிலை சரியில்லை, அது என்றுமே சரியாகாது , எனவே என்னுடைய முடிவுக்கு அனைவரும் மன்னித்து கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

  உடல் நிலை சரியில்லாததன் காரணமாகத்தான் பிரீத்தி ரோஜா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×