என் மலர்

    செய்திகள்

    தங்கச்சிமடம் அருகே வீட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை
    X

    தங்கச்சிமடம் அருகே வீட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தங்கச்சிமடம் அருகே வீட்டை உடைத்து பணம், பொருட்களை அள்ளிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே உள்ள பொட்டல்நகரைச் சேர்ந்தவர் இந்திரன். இவரது மனைவி அனிதா (வயது43). இவர்களது மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள உறவினர்களை அழைப்பதற்காக கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுவிட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், பட்டு வேட்டி, சேலைகள் மற்றும் பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர்.

    வீடு திரும்பிய அனிதா, கதவு உடைக்கப்பட்டு பணம் பொருட்கள் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் தங்கச்சிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்காமு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
    Next Story
    ×