என் மலர்

  செய்திகள்

  தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாதது ஏன்? - மாநில பொருளாளர் விளக்கம்
  X

  தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாதது ஏன்? - மாநில பொருளாளர் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாதது ஏன் என்பதற்கு மாநில பொருளாளர் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டம், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 150 படங்கள் நடித்து சம்பாதித்தவர். அவர் காசு சேர்ப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தலில் அந்த கூட்டணி தொடரவில்லை.

  அதே போல் 2016 தேர்தலின் போதும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தி.மு.க.வுடன் நடத்த பேச்சுவார்த்தையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அது குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அடிமட்டத் தொண்டர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.

  தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்ட விஜயகாந்தின் கரத்தை வலுப்படுத்த உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  Next Story
  ×