என் மலர்
செய்திகள்

குடிபோதையில் மாடியில் தூங்கிய வாலிபர் கீழே விழுந்து பலி
குரோம்பேட்டையில் குடிபோதையில் மாடியில் தூங்கிய வாலிபர் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்:
குரோம்பேட்டை ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரெமிஜியஸ் (24). தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர் அசோக்சமாஜூடன் மது அருந்தினார்.
பின்னர் அசோக்குமாரை தனது வீட்டுக்கு ரெமிஜியஸ் அழைத்து சென்றார். அங்கு இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரெமிஜியஸ் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது.
அவர் மாடிக்கு சென்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குடிபோதையில் மாடியின் தடுப்பு சுவர் மேல் பகுதியில் படுத்து தூங்கி விட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் நள்ளிரவில் கீழே விழுந்ததால் யாருக்கும் தெரியவில்லை. இன்று காலைதான் அவர் பலியானது தெரிந்தது.
இது குறித்து சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரெமிஜியஸ் உடலை கைப்பற்றினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story