என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியை கலெக்டர் ஏற்றினார்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்தில் கலெக்டர் மலர்விழி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சிவகங்கை:
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 624 நபர்களுக்கு ரூ.92 லட்சத்து 50 ஆயிரத்து 199 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் 120 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களும், மாவட்ட கலெக்டர் மலர்விழி வழங்கினார். பின்னர் மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






