என் மலர்
செய்திகள்

ஈரோடு காந்தி சிலை முன் தேசிய கொடியுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர் கைது
ஈரோடு காந்தி சிலை முன் தேசிய கொடியுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று கையில் தேசிய கொடியுடன் வந்தார். மாநகராட்சியில் காலை சுதந்திர தினவிழா நடந்து கொண்டிருந்தது. மேயர் மல்லிகா பரமசிவம் கொடி ஏற்றினார்.
மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்திசிலை முன் துரைசாமி திடீரென கையில் தேசிய கொடியுடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதனால் மாநகராட்சி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரைசாமியை சுற்றி வளைத்தனர். அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட துரைசாமி கூறும் போது, ‘‘வடமுகம் வெள்ளோடு பஞ்சாயத்துக்கு வீட்டுவரி கட்ட சென்றால் வரி வாங்க மாட்டேன்கிறார்கள். வீட்டு வரி ரசீதும் தர மாட்டேன்கிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை’’ என்று கூறினார்.

Next Story