என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் வாலிபர் பிணம்: கொலை செய்யப்பட்டாரா?
ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் வாலிபர் பிணமாக கிடந்ததையடுத்து அந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சாலமங்கலத்தில் தாம்பரம் - வாலாஜாபாத் செல்லும் சாலையில் விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலையோரம் கழிவுநீர், மழை நீர் செல்ல கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இன்று காலை கழிவு நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். கால்வாயில் இருந்த கம்பிகள் அவரது உடலை குத்தி கிழித்து இருந்தது.
தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வாலிபர் உடலை கைப்பற்றினர். அவரது சட்டை பையில் தனியார் காவலாளி நிறுவன அடையாள அட்டை இருந்தது.
அதில் ராஜேந்திரகாலத்தி என்ற பெயர் இருந்தது. வாலிபர் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் அவரை கொலை செய்து கால்வாயில் வீசி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Next Story






