என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திரதின விழா: மாமல்லபுரம் ஓட்டல், விடுதிகளில் போலீசார் கண்காணிப்பு
    X

    சுதந்திரதின விழா: மாமல்லபுரம் ஓட்டல், விடுதிகளில் போலீசார் கண்காணிப்பு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள் விடுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரு நகரங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள் விடுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    விடுதிகளில் தங்கவரும் உள்நாட்டவர், வெளி நாட்டவர் அனைவரிடமும் முகவரி அடையாளம், பாஸ்போட், குடியுரிமை, விசா என அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர்தான் அறை கொடுக்க வேண்டும்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தரவேண்டும், 24 மணி நேரமும் உள்ளே வருவோர், வெளியே செல் வோரை கேமரா மூலம் காவலாளிகள் கண்காணித்து அதை கம்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் ஹோட்டல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்திஉள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் சந்கேப்படும் வாகனங்களை போலீசார் நிறுத்தி தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் கடற்கரை அருகே கல்பாக்கம் அணு உலை இருப்பதால் தீவிரவாதிகள் நோட்டம் ஏதும் உள்ளதா? என்று கடலோர காவல்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×