என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டல் அருகே வேன் மீது பைக் மோதி வாலிபர் பலி
    X

    திண்டல் அருகே வேன் மீது பைக் மோதி வாலிபர் பலி

    திண்டல் அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள வல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 25). இவரது நண்பர் கோவிந்த ராஜ் (24). நண்பர்களான இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள்.

    இந்த நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு வந்து விட்டு திரும்ப சென்று கொண்டிருந்தனர். திண்டல் அருகே உள்ள பவளத்தாம்பாளையம் அருகே சென்றபோது முன்னால் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.

    அப்போது வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வேன் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட கோவிந்தராஜ் கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×