என் மலர்
செய்திகள்

கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 5 பேர் கைது
கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த கோவளத்தில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் 5 பேர் கும்பல் காரில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து சென்ற கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.
காரை சோதனை செய்த போது அதில் பட்டாகத்தி மற்றும் பழைய டயர் நடுவில் சிறிய வாளியில் நாட்டு வெடி குண்டு இருந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பிடிபட்ட 5 பேரும் சேர்ந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு பாண்டிச்சேரியில் வெடிகுண்டு கொடுத்தது யார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் பிடிபட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட கியுபிராஞ்ச் போலீசாரும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்து கின்றனர்.கைதான 5 பேரிடமிருந்தும் ஒரு கார், 4 நாட்டு வெடிகுண்டுகள், 3 பட்டாக்கத்தி, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள கால்வாய் பள்ளத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
Next Story






