என் மலர்
செய்திகள்

நெய்வேலியில் வேன் மோதி முதியவர் பலி
நெய்வேலியில் வேன் மோதி முதியவர் பலியானார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 1-வது வட்டம் மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 85).
சம்பவத்தன்று வீட்டின் அருகில் உள்ள சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது வடலூரில் இருந்து பண்ருட்டிக்கு வேன் வந்தது.
அந்த வேன் எதிர் பாராத விதமாக வெங்டாசலபதி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலபதியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக வெங்கடாசலபதி இறந்தார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






