என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு
    X

    நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு

    நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

    நெல்லிக்குப்பம்:

    பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் புறப்பட்டது.

    காலை 9 மணிக்கு இந்த பஸ் நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்வது வழக்கம். இதையொட்டி பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலர் அந்த பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ஆனால் பஸ்சில் ஏற்கனவே அதிகம் கூட்டம் இருந்ததால் டிரைவர் பஸ்சை அங்கு நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார்.

    பஸ்சை நிறுத்தும்படி அங்கே நின்றவர்கள் சத்தம் போட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் பஸ்சின் பின்பகுதியில் சரமாரியாக கல்வீசி தாக்கினர்.

    இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். உடனே பஸ் மீது கல்வீசியர்கள் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர்.

    பஸ் மீது கல்வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் வேறொரு பஸ்சில் ஏற்றி கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்தசம்பவம் தொடர் பாக நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×